பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் 

உடுமலை: உடுமலை ஒன்றியம், தின்னப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, சாளையூரில், கடந்த 2011–12ல், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தின், பராமரிப்பு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பிடம், ஒப்படைக்கப்பட்டது. 

சீரமைத்தல் திட்டத்தின் கீழ், 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது வளாகம் பயன்பாடு இல்லாமல், பூட்டியே கிடக்கிறது. சுற்றிலும் புதர் மண்டி, அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது.

இது குறித்து, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement