கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் முள் மரங்கள்: அகற்ற மனமில்லாத அதிகாரிகள்

கீழக்கரை:கிழக்கு கடற்கரை பிரதான சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்த நிலையில் ஏராளமான சீமை கருவேல முள் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கையாண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம், திருப்புல்லாணி, கீழக்கரை ஏர்வாடி சிக்கல் முதல் சாயல்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்களை முறையாக நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. முக்கிய திருப்பங்கள் மற்றும் வளைவு பகுதிகளில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.

எனவே சாலையோர சீமை கருவேல மரங்களை அகற்றிடவும், ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்களில் இடையூறான பொருட்களை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement