மிக குறுகிய காலத்திற்குள் வலிமையான சக்தி!
மிக குறுகிய காலத்திற்குள் வலிமையான அரசியல் சக்தியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. இக்கட்சி, மத்திய அரசில் அதிகாரத்தைப் பெற்றிருப்பதோடு, 22 மாநிலங்களிலும் ஆட்சி அமைத்துள்ளது. 'நாடே முதன்மையானது, கட்சி அதற்கடுத்ததுதான்' என்பதைத் தொடர்ந்து உறுதியாக உயர்த்திப் பிடிக்கும் ஒரே கட்சி இது மட்டுமே. யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
எதிர்காலத்தை சீரழிக்கிறது!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது. இதன்மூலம் யாருக்கு ஆதாயம்? 22 லட்சம் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ள இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? எப்போது நீட் தேர்வு குறித்து அவர் பேசுவார்? பிரியங்க் கார்கே கர்நாடக அமைச்சர், காங்.,
மண்டியிட்ட காங்கிரஸ்!
கடந்த, 2006ல் மும்பை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவுக்கு மண்டியிட்ட காங்., அரசு பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தியது. அப்போது, நம் நாட்டின் சர் க்ரீக், சியாச்சின் உள்ளிட்ட பகுதிகளை அந்நாட்டிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. நிஷிகாந்த் துபே லோக்சபா எம்.பி., - பா.ஜ.,