சாகை வார்த்தல் திருவிழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் அய்யனாரப்பன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் கிராமத்தில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனாரப்பன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்த பின்னர் மேளதாளம் முழங்க அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடத்தை ஊர்வலமாக சென்று சுவாமியை வழிபட்டனர். 

Advertisement