மணல் கடத்திய மினி வேன்பறிமுதல்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று காலை எரளூர் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மினி வேனில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை பார்த்ததும் மணலுடன் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையெடுத்து போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த மினி வேனை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement