‘காஸ்’ விலை உயர்வை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர்: ‘காஸ்’ சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மகிளா காங்கிரஸ் சார்பில் ஒப்பாரி வைத்து நுாதன போராட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசு, பெட்ரோல், 3.14 ரூபாய்; டீசல் 3.11 ரூபாய் விலை உயர்த்தியது. இதைத்தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுவதாக கண்டித்து, மகிளா காங்கிரஸ் சார்பில், நேற்று காலை திருவொற்றியூர் – தேரடி தபால் நிலையம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ராமலெட்சுமி, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் தாரணி திரவியம் ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, ஸ்கூட்டர் மற்றும் ‘காஸ்’ சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், பெட்ரோல் – டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். பின், பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு கோரி, எழுதிய கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்களின் திடீர் ஒப்பாரி போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும்
-
அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
-
பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றும் உத்தரவு; திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் மறுப்பு
-
நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை
-
கோவில்களில் தங்கம் இருப்பு; வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
-
குடியுரிமை விதிகளில் மாற்றம்; பாகிஸ்தான் உள்பட 3 நாட்டவர்கள் பாஸ்போர்ட் விபரங்களை சமர்பிக்க உத்தரவு
-
மே23ல் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; உதயநிதி அறிவிப்பு