மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால் காஞ்சி ரயில்வே சாலையில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள ராஜாஜி மார்க்கெட்டிற்கு கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
நகரின் பல்வேறு பகுதிகள், சுற்றுவட்டார கிராமங்களுக்கு இங்கிருந்துதான் காய்கறிகள் சப்ளை ஆகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் சில தினங்களாக அவ்வப்போது மழைநீர் பெய்து மார்க்கெட் எதிரில் தேங்கியுள்ளது.
இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளதால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கழிவுநீருடன் சேர்ந்து தேங்கியுள்ள மழைநீரால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
எங்கள் கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை; அமைச்சர் ராஜ்மோகன் பதில்
-
செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கணும்; தமிழக அரசிடம் அனுமதி கேட்கிறது அமலாக்கத்துறை
-
அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
-
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை
-
கோவில்களில் தங்கம் இருப்பு; வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு