இசை படிக்க விண்ணப்பிக்கலாம் அரசு இசை கல்லுாரி அழைக்கிறது
கோவை: கலைபண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது.
இளங்கலை இசைப்பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய துறைகளில் சேர பிளஸ் 2 தேர்ச்சி போதும். வயது வரம்பில்லை.
டிப்ளமோ பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய துறைகளில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 16 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இளங்கலை மறறும் டிப்ளமோ துறைகள் மூன்றாண்டு படிப்புகளாகும்.
ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர , பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பி.ஏ., இசை அல்லது இசைக்கலைமணி பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
16 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாலைநேர இசைக்கல்லுாரியில் குரலிசை, வீணை மற்றும் வயலின் போன்ற பிரிவுகளில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்பிற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17 முதல் வயது வரம்பின்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இசைப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், www.artandCulture.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு, கல்லுாரிக்கு நேரிடையாகவோ அல்லது 0422-2 611196 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
-
பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி