பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி
நமது நிருபர்
காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த முற்காலப் பல்லவ மன்னர்களான விஷ்ணு கோபவர்மன் மற்றும் சிம்மவர்மன் ஆகியோரால் வெளியிடப்பட்டவை உட்பட 7 செப்புத் தகடுகளை ஸ்காட்லாந்திலிருந்து மீட்டு கொண்டு வர இந்தியத்தொல்லியல் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
11ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள், கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பில் இருந்த நிலையில், இந்தியாவிடம் முறைப்படி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது நெதர்லாந்து நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடியின் மூலம் சாத்தியமானது.
இதே போன்ற வரலாற்று ஆவணங்கள் வேறு எந்தெந்த நாடுகளில் உள்ளன என்று தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, பல்லவ மன்னர்களின் செப்பேடுகள் எடின்பரோ நகரில் இருப்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த முற்காலப் பல்லவ மன்னர்களான விஷ்ணு கோபவர்மன் மற்றும் சிம்மவர்மன் ஆகியோரால் இந்த செப்பேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரிய வரலாற்று தகவல்களை கொண்ட இந்த 7 செப்புத் தகடுகளை ஸ்காட்லாந்திலிருந்து மீட்டு கொண்டு வர தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கி.பி. 4ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் இந்தச் செப்பு தகடுகள், எடின்பரோ பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஏழு செப்புச் சாசனங்களும் 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் சர் வால்டர் எலியட்டால் ஆந்திராவில் இருந்து 6 தகடுகளும், குஜராத்தில் இருந்து ஒரு தகடும் சேகரிக்கப்பட்டன. இந்தச் செப்பு தகடுகள், நமது நாட்டின் விலைமதிப்பற்ற கலாசாரப் பொக்கிஷமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 250 முதல் 575 வரை ஆட்சி செய்தவர்கள் முற்காலப் பல்லவ மன்னர்கள்.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழரின் ஆனைமங்கலம் செப்பேடுகளும் - 4,5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் செப்பேடுகளும் அயல்நாட்டில் உள்ளன, அது எப்படி...? இங்கே இருந்த எந்தவொரு தறுதலை “எட்டப்பன்களோ”தான்.... அற்ப பொற்காசுக்களுக்காக வெளிநாட்டுக்காரனுக்கு வித்திருப்பான்... இதன் அருமை தெரியாமல் வித்திருக்கான்... பொற்காசுகளுக்கு வித்தானோ அல்லது பழைய ஈய,இரும்பு,பித்தளைன்னு நினைச்சு இந்த தாமிர பட்டயத்தை எடைக்கு எடை... பேரீச்சம்பழத்திற்கு போட்டிருப்பான்களோ...? அவனைதான் இந்திய நாட்டின் கலாச்சார, பண்பாட்டு விரோதி...? என்ன பண்றது எல்லா காலத்துலேயும் “எட்டப்பன்கள்” இருந்திருக்கிறார்கள்... பயிருடன் களையும்தானே விளைகிறது... நம் மண்ணில்.
யாரும் விற்கவில்லை. டச்சு பாதிரியார் ஒருவர் எடுத்துச் சென்று விட்டார். அவரது குடும்பத்தினர் பல்கலைக்கழகத்துக்கு அளித்துவிட்டனர்.
திராவிஷ பிரச்சாரத்தில் பிதற்றிக் கொள்ளும் கருத்துக்கள் 1.தமிழனுக்கு மதமில்லை ஏனெனில் கீழடியில் விக்கிரகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 2. தமிழன் நாட்டார் வழிபாடு, முன்னோர் வழிபாடுகளை மட்டுமே மேற்கொண்டிருந்தனர் 3.தமிழன் சைவன் மட்டுமே . விஷ்ணு ராமர் நரசிம்மர் போன்ற வேறெந்த கடவுளையும் வணங்கிய ஆதாரமில்லை. ஆனால் இந்த முற்கால பல்லவர்கள் பெயரே வேறு ஒரு உண்மைகளை கூறுகின்றன.
நம்ம சோசப்பு பதவியேற்ற பிறகு அவனவன் பயந்து நடுங்கி செப்பேடுகளை தருகிறான். தராவிட்டால் இவர் நேரடியாக அவ்விடமே சென்று பாதுகாப்பு அரணை உடைத்தெறிந்து மீட்டு கொண்டு வருவார். உலகமே பயந்து நடுங்குது.
இந்நேரம் நம்ம சொடலை ஆட்சியில் இருந்திருந்தால் ஸ்காட்லாந்துக்கு போன் பண்ணி மிரட்டி இருப்பாரு..
ஸ்ரீரங்கம் போன்ற புராதன கோவில்களின் ஆயிரங்கால் மண்டபங்களில் நெல்மூட்டைகள் அடுக்கி வைப்பது மற்றும் புராதன சிலைகளில் ட்ரில்லிங் செய்து வைரிங் அமைப்பது சிலைகளை கல்லால் எரிந்து சேதப்படுத்துவது நிறைய கோவில்களின் நிலைமை ...வெளிநாடுகளில் முறையாக பராமரிக்கிறார்கள் ..நூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்கள் அமெரிக்கவில் முறையாக பாதுகாக்கப்பட்டு மைக்ரோசாப்ட் கம்பெனியின் சேவையால் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன ..தமிழ்நாட்டு MLA யாரவது அறம் பொருள் இன்பம் பிரிவில் பத்து திருக்குறள்களை ஒப்பிக்க முடியுமா ? தமிழ்த்தாய் வாழ்த்து பிழையில்லாமல் எழுத தெரியுமா ?
ஹீப்ரு அல்லது அரபி புத்தகம் படிச்சாலும் போதும்.
திருக்குறளை விடுங்க சார், தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது என இதுகளுக்கு தெரியுமா?
தமிழ் ரசிகர்களை கேவலப் படுத்த வேண்டாம். முதலமைச்சர் விஜயின் எல்லா படங்களையும் பார்த்து விட்டீர்களா? பார்க்காத படங்களை பார்க்க ஒரு வாய்ப்பு என்று ஒரு அறிவிப்பு
"நம் நாட்டின் உண்மையான வரலாற்றையும், பல்லவ மன்னர்களின் ஆட்சி முறையையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்தச் செப்பேடுகள் மிக முக்கியமான ஆதாரங்கள். வெளிநாடுகளில் முடங்கிக்கிடக்கும் இதுபோன்ற இன்னும் எண்ணற்ற தமிழ்நாட்டின் வரலாற்றுச் சின்னங்களை முழுமையாகக் கண்டறிந்து மீட்க வேண்டும். அவை அனைத்தும் மீட்கப்பட்டு நம் ஊர் அருங்காட்சியகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்."
கோ ஆர்டினேட்டரை மிரட்டி வெச்சுருக்காரா ?
"பிரதமர் மோடி அவர்களின் ஐரோப்பிய நாடுகளுக்கான அரசு முறைப் பயணங்கள் வெறும் வர்த்தகம் சார்ந்ததாக மட்டுமல்லாமல், நம் நாட்டின் கலாச்சாரப் பெருமைகளை மீட்பதற்கும் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு நெதர்லாந்து செப்பேடு மீட்பும், தற்போது பல்லவர் காலச் செப்பேடுகளை மீட்க நடக்கும் இந்தத் தீவிர முயற்சியுமே சாட்சி. உலக அரங்கில் இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது"
"நெதர்லாந்தில் இருந்து சோழர் காலத்து செப்பேடுகளை மீட்டதைத் தொடர்ந்து, தற்போது ஸ்காட்லாந்தில் இருக்கும் முற்காலப் பல்லவ மன்னர்களின் 7 அரிய செப்பேடுகளையும் மீட்க இந்தியத் தொல்லியல் துறை ASI எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது. பிரிட்டிஷாரால் நம் நாட்டை விட்டு எடுத்துச் செல்லப்பட்ட நம் முன்னோர்களின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் அனைத்தும் மீண்டும் தாய் மண்ணிற்குத் திரும்புவது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையான விஷயம். இந்த முயற்சிகள் இன்னும் வேகமெடுக்க வேண்டும்"மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்