தினமலர் செய்தி எதிரொலி:த.வெ.க., பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்
ராஜபாளையம்: தினமலர் செய்தி எதிரொலியால் ராஜபாளையம் நகர் பகுதியில் மக்களுக்கு இடையூறாக இருந்த த.வெ.க., ஆக்கிரமிப்பு பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி அமைச்சரும், த.வெ.க., பொதுச்செயலாளருமான ஆனந்த் ரோடுகளிலோ மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியினர் பேனர்கள் வைக்கக்கூடாது, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த மாற்றம் மக்களிடையே வரவேற்பு ஏற்படுத்தியது.
இது பற்றி கட்சியினர் கண்டுகொள்ளாமல் 5 நாட்களுக்கு மேல் இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் இருந்து வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
செய்தி எதிரொலியாக ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும்
-
உதகையில் துவங்கியது 128வது மலர் கண்காட்சி
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்
-
விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி
-
அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?