கள்ள நோட்டு அச்சிட்ட மூவர் கைது

1

-நமது நிருபர்-

கோவையில் கள்ள நோட்டு அச்சிட்ட கும்பலில் மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டு மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சதாம் உசேன், 28. இவரது நண்பர் பைசல், 37. இவர்கள் மீதான சந்தேகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது இவர்கள் இருவரிடமும் இருந்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், போதை மருந்து ஆகியவை செய்யப்பட்டன.

கள்ள நோட்டை அச்சிடுவதற்கான இயந்திரத்தை ஹக்கீம் என்பவர் வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

கரும்புக்கடை பிஸ்மி நகரை சேர்ந்த ஹக்கீம், 51, கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 64வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement