திருப்பதிக்கு ஏ.சி., பஸ் இயக்க காஞ்சிபுரம் பயணியர் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்:திருப்பதிக்கு ஏ.சி., பேருந்து இயக்க வேண்டும் என, காஞ்சிபுரம் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில், காஞ்சிபுரம் மண்டலத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், காஞ்சிபுரம் - அரக்கோணம் வழியாக திருப்பதி வரையில், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் இடை நில்லாத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி வரையில் குளிர்சாதன பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பேருந்து பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னையில் இருந்து, திருவள்ளூர் வழியாக திருப்பதிக்கு குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளிலும் குளிர் சாதன வசதிகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி வரையில் குளிர் சாதன பேருந்துகள் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்