குட்கா விற்ற பெண் மீது வழக்கு

விழுப்புரம்: குட்கா விற்ற பெட்டிக்கடை பெண் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார், பானாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சக்திகுமார் மனைவி விஜயலட்சுமி, 38; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் விஜயலட்சுமி மீது வழக்குப் பதிந்து, 35 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement