டூவீலர் திருட்டு போலீசில் புகார்

குமாரபாளையம்:குமாரபாளையம்-பள்ளிப்பாளையம் பிரிவு பகுதியில் காலணி கடை வைத்து தொழில் செய்து வருபவர் சையத் முஸ்தபா, 51.

இவர், 'பிளசர்' டூவீலரை கடைக்கு பின்புறம் உள்ள குடோன் முன், நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு நிறுத்தியிருந்தார். நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்று பார்த்தபோது டூவீலரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன டூவீலரை கண்டுபிடித்து தருமாறு சையத் முஸ்தபா அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement