பாதிப்பில்லாத இடத்தில் சிப்காட் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., தகவல்
எருமப்பட்டி:''பொதுமக்களுக்கு
பாதிப்பில்லாத இடத்தில், 'சிப்காட்' அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என, சேந்தமங்கலம் த.வெ.க.,-எம்.எல்.ஏ.,
சந்திரசேகர் தெரிவித்தார்.
சேந்தமங்கலம் தொகுதி,
த.வெ.க.,-எம்.எல்.ஏ., சந்திரசேகர், நேற்று எருமப்பட்டி யூனியனில்
உள்ள பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள்,
வெளி நோயாளிகள் வரும் பகுதி, பிரசவ வார்டு பகுதி ஆகியவைகளை ஆய்வு
செய்ததுடன், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பணியாளர்களிடம்
கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தலில் ஓட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றி. கொல்லிமலையை சிறந்த
சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். எருமப்பட்டி பகுதியில்
குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் மக்களை
சந்தித்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்திரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முழு நடவடிக்கை எடுப்பேன். மோகனுார் பகுதியில் அமைய
உள்ள, 'சிப்காட்' பொது மக்களுக்கு பாதிப்பில்லாத இடத்தில் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
-
தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
-
தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'