தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
மதுரை: தாம்பரம் - போடி இடையே கோடை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மே 23, 30, ஜூன் 6, 13 (சனி தோறும்) இரவு 10:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06059), மறுநாள் காலை 11:15 மணிக்கு போடி செல்கிறது.
மறுமார்க்கத்தில், மே 24, 31, ஜூன் 7, 14 (ஞாயிறு தோறும்) மாலை 4:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06060), மறுநாள் காலை 6:30 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
மூன்று 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 12 ஸ்லீப்பர் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
இன்று (மே 21) காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு