'உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் செயல்படுவோம்'

குளித்தலை:குளித்தலை, பெரிய பாலம், த.வெ.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில்,
செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிர
மணியன் தலைமை வகித்தார். குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதி பொறுப்பாளர்கள்,
ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, கிருஷ்ணராபுரம் த.வெ.க.,-எம்.எல்.ஏ., சத்யா கலந்துகொண்டார்.


கூட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:த.வெ.க., அரசுக்கு எந்தவித கெட்டபெயரும் இல்லாமல், கட்சி உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் எந்தவித
குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடாமல் கட்சிக்கும், பொது மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில், அனைத்து இடங்களிலும், த.வெ.க., வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைவரும் எந்தவித கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன்
செயல்பட வேண்டும். மாற்று கட்சியினர் நம் கட்சியில் இணைந்தாலும், அவர்களை
வரவேற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement