ஜோஸ் ஆலுக்காஸ் புதிய கிளை கள்ளக்குறிச்சியில் திறப்பு

சென்னை: கள்ளக்குறிச்சியில் புதிதாக திறக்கப்பட்ட, ஜோஸ் ஆலுக்காஸ் கிளையில், வரும் 20ம் தேதி வரை, 1.5 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்குவோருக்கு, தங்க நாணயம் இலவசம் உட்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், தனது 66வது பிரமாண்ட கிளையை, கள்ளக்குறிச்சியில் உள்ள துருகம் சாலையில் திறந்து உள்ளது.

இந்த கிளை, கள்ளக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், நகராட்சித் தலைவர் சுப்புராயலு, நகராட்சித் துணைத் தலைவர் அப்துல் ரசாக் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பரத் துாதரும், திரைப்பட நடிகையுமான கீர்த்தி சுரேஷ் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜோஸ் ஆலுக்காஸ் மேலாண்மை இயக்குநர் ஜான் ஆலுக்காஸ் பேசுகையில், 'வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன மற்றும் பாரம்பரிய நகைகளின் மாபெரும் அணிவரிசை இங்கு உள்ளது. பிரீமியம் ரக நகைகளை வாங்கும் இனிதான அனுபவத்தை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம ் '' என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ' 'இந்த நிறுவனம் தொடர்ந்து மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நகைகள் எப்போதும் நமது கலாசாரம் மற்றும் கொண்டாட்டங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை.

' 'இங்கு, நேர்த்தி மற்றும் கலைநயம் மற்றும் சர்வதேச தரச்சான்று பெற்ற வைர நகைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்களும் உள்ள ன '' என்றார்.

வரும் 20ம் தேதி வரை, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோருக்கு, தங்க நாணயம் இலவசம்; வைர நகைகளுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி; பிளாட்டினம் நகைகளின் செய்கூலி மீது, 30 சதவீதம் தள்ளுபடி. உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Advertisement