மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீரில், மீன்கள்
வளர்க்கப்படுகின்றன.



வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து கொண்டுவந்து
கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது, ஜிலேபி, கொக்கு மீன்கள் அதிகளவில் கிடைக்கிறது. ஜிலேபி மீன் ஒருகிலோ, 150 ரூபாய், கொக்கு மீன், 250 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கரூர், புலியூர், சேங்கல், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள்,
அதிகாலை முதலே வந்து காத்திருந்து மீன்களை வாங்கிசென்றனர்.

Advertisement