மும்மொழி திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது

22

@quote@ தமிழகத்தில் சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, வாழ்வாதாரங்களை காக்கும் கடமை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் விஜய் ஆட்சி நடத்த வேண்டும். பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய தி.மு.க., அரசு ஏற்கவில்லை. அதே நிலைப்பாட்டை இந்த அரசும் பின்பற்ற வேண்டும்.

'நீட்' தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்ததால், 22 லட்சம் மாணவர்கள் ஏமாற்றமும், வருத்தமும் அடைந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவது குறித்து, பட்ஜெட்டுக்கு பிறகு சொல்வதாக ஒரு அமைச்சர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

- வைகோ, பொதுச்செயலர், ம.தி.மு.க.,quote

Advertisement