ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுதும் வேலை கொடுங்க
@quote@ஊர்க்காவல் படையில், பல ஆண்டுகளாக குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ல் தினசரி ஊதியம் 152 ரூபாயாக உயர்த்தப்பட்டாலும், மாத வருவாய் 2,800 ரூபாயை தாண்டவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தினசரி ஊதியம் 560 ரூபாயாக உயர்த்தப்பட்டபோது, பணி நாட்களை ஐந்து நாட்களாக அரசு குறைத்தது. பின், பணி நாட்கள் பத்தாக உயர்த்தப்பட்டபோது, ஊதியம் 280 ரூபாயாக குறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டது.
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுதும் பணி வழங்கி, மாத ஊதியமாக 16,800 ரூபாய் வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாட்களும் பணி வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
- அன்புமணி தலைவர், பா.ம.க.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உள்ளாட்சி நிர்வாக ஒப்பந்த பணிகளில் தலையீடு -- நீடிப்பு முன்னாள் பிரதிநிதிகள் ஆதிக்கத்தால் தரமற்ற பணி
-
திருவாதவூரில் கொடியேற்றம்
-
நமச்சிவாயம் டில்லியில் முகாம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
புளு ஸ்டார் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
-
திறந்தவெளி பள்ளியில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
-
குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
Advertisement
Advertisement