புளு ஸ்டார் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 114 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி யுகிப்பிரியா 486 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி மனிஷா 481 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவி கனிமொழி 479 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பள்ளியில் 451 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 79 மாணவர்கள் டிஸ்டென்ஷன் பெற்றுள்ளனர். 32 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாட வாரியக முதல் மதிப்பெண்களாக ஆங்கிலம்-99, சமூக அறிவியல்-99, தமிழ்-7 பேர், கணிதம்-2 பேர், அறிவியல்-9 பேர்கள் 97 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார், பள்ளி முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் சாலைசிவ செல்வம் மற்றும் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement