உள்ளாட்சி நிர்வாக ஒப்பந்த பணிகளில் தலையீடு -- நீடிப்பு முன்னாள் பிரதிநிதிகள் ஆதிக்கத்தால் தரமற்ற பணி
மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை பி.டி.ஓ.,க்கள் என நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் கண்காணிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது.
பதவிக்காலம் முடிந்து பல மாதங்களாகியும் அப்பகுதியை சார்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் ஆதிக்கம் இங்கு தொடர்கிறது.
அலுவலக அறைகளில் அமர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்திற்கும் குறைவில்லை. ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் கணினி பிரிவு, புதுவாழ்வு, வேலை உறுதி திட்ட பணிகளில் பெரும்பாலும் மகளிர் ஊழியர்கள் உள்ளனர்.
இருப்பினும் இங்கு முன்னாள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் எந் நேரமும் ஆக்கிரமித்து உள்ளனர்.
முன்னாள் பிரதிநிதிகள், ஆளுங்கட்சியினரின் நிர்வாக தலையீடு மக்களிடையே அதிருப்தி , தரமற்ற ஒப்பந்த பணிகள் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இப் பிரச்னைகளுக்கு கடிவாளம் அமைக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.