திருவாதவூரில் கொடியேற்றம்
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றப்பட்டது. சுவாமிகள் முன்பு கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் மே 25-ல் மேலுாரில் எழுந்தருள்கின்றனர். மே 28ல் திருக்கல்யாணம், 29 ல் தேரோட்டம், 30 ல் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.
ஏற்பாடுகளை இணை கமிஷனர் சுரேஷ், உதவிகமிஷனர் லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement