உள்ளாட்சித் துறை இயக்குநருடன் நேரு எம்.எல்.ஏ., ஆலோசனை 

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு, இயக்குநர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ.,வின் நேர்முக உதவியாளர் சாய்நாதன், மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞரணி தலைவர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அமர்வதற்கு சேர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அண்ணா திடல்  விளையாட்டு மைதானத்தை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணா திடலில் மாணவ, மாணவிகள் விளையாடுவதற்கான வசதிகளை போர்கால அடிப்படையில் செய்துதர வேண்டும். குபேர் அங்காடியை (பெரிய மார்க்கெட் ) நவீனப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

 

Advertisement