பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 1,060 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையை ஒட்டியுள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைந்து வருகிறது.
எனவே, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு