நிழற்குடை வசதி இன்றி பயணியர் கடும் அவதி
செய்யூர்:கூணங்கரணை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதியின்றி பயணியர் அவதிப்படுகின்றனர்.
சித்தாமூர் அடுத்த கூணங்கரணை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதை மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வந்தனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கம் பயணியர் அவதிப்படுகின்றனர். மழை மற்றும் வெயில் காலத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கூணங்கரணையில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
-
தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
-
தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'