தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாறுவதை நியாயப்படுத்த முடியாது; சொல்கிறார் திருமா
சென்னை: தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாறுவதை நியாயப்படுத்த முடியாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி: தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாறுவதை நியாயப்படுத்த முடியாது. 7,8 வருஷமாக அவர்களுடன் சேர்ந்து பயணித்து இருக்கிறோம். அவர்களின் ஓட்டும் சேர்ந்து தான் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். அவர்களுடைய உழைப்பு இங்கே இருக்கிறது.
ஸ்டாலின் தான் முதல்வர் என்ற கருத்தை வைத்து தான் நாம் இந்த ஓட்டை வாங்கி இருக்கிறோம். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் தவெகவுக்கு எதிரான ஓட்டு தான் இது என்பதை நாம் உறுதிப்படுத்துகிறோம்.
அதிமுகவுக்கு எதிராக இருந்தாலும், இது தவெகவுக்கும் எதிரான ஓட்டு தான். இப்படி இருக்கும் போது நாம் கூட்டணிக்கு தாவுவது குறித்து நெருடல் இருக்கிறது. அதனால்தான் நாம் உடனடியாக இந்த முடிவை எடுப்பது இல்லை. ஒரு விரிவான ஆலோசனை தேவைப்பட்டது.
கட்சியினர் மத்தியில் இது பற்றி விரிவாக பேச வேண்டிய தேவை இருந்தது. அதற்காக நாங்கள் எடுத்துக் கொண்ட கால அவகாசம் தான் இது. அது ஒரு பெரிய தாமதமே கிடையாது. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து மிக மிக அவசரப்பட்டு தான் முடிவு எடுத்து இருக்கிறோம். தாமதமே கிடையாது.
அவர்கள் ஜனாதிபதி ஆட்சி வரும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை அவசரப்படுத்துகின்றனர். நாங்கள் சொன்னதன் அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் முடிவு அறிவித்துவிட்டது நீங்கள் ஏன் சொல்லவில்லை என்று சொல்கின்றனர். இதற்கு இடையே இருக்கும் சூழல்கள் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. நான் ஒரு கட்சி நடத்துகிறேன். கட்சிக்குள் பல கருத்து இருக்கிறது. அது ஒரு விவாதத்துக்குரிய கருத்துக்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் எடுத்த உடனே அறிவிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
அப்போ என்ன திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு... TVK கூட்டணிக்கு ஓடிப் போய் ஆதரவு கொடுத்தீர்கள் ?
அதை செய்த முதல் கூட்டம் திருட்டு திராவிட கூட்டணி கூட்டமே.
புது ஆட்சியில் கையை காலை புடிச்சு எப்படியோ சேர்ந்துடலாம். ஆனால் இதுநாள் வரை சோறு வச்சவன் சும்மா இருப்பானா. கும்மி எடுத்துட மாட்டான். இருதலை கொள்ளி எறும்பு நிலைதான்.
தேர்தலுக்கு முன் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை நியாய படுத்த முடியாது. விஜய் சிறுத்தை, காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பொறுப்பு தர கூடாது. ஜனாதிபதி ஆட்சி, பிஜேபி உள் வந்து விடும் என்று மாயை ஆதரவு தந்த சிறுத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் நிதி வசூலித்து கொடுத்து விடுவது மேல். திமுக வளர்த்த ஊழல் ஒழியாது. காரணம் தண்டனை குறைவு.
ஆனால் - நாங்கள் உள்ளே இருந்துகொண்டு - வெளியே ஆதரவு தருவோம்
அடங்க மறு ...அத்து மீறு ...சோபா வந்த பிறகு காணோமே
1).. மனிதர் ஜோசஃப் விஜய் அவர்களால் வெளுத்து போய் இருக்கிறார்.
2). ஜோசஃப் விஜய்க்கு அதரவு கொடுத்து அவரது கட்சியில் உள்ள கொஞ்ச நஞ்ச அணில்களை திருப்திப்படுத்தி உள்ளார்.
3). கூடவே தன் மிஷனரி எஜமானர்கள் மகிழ்ச்சி சந்தோஷமாக இருக்க செய்து உள்ளார்.
4). ஒருபுறம் திருமா அவர்களுக்கு ஜோசஃப் விஜய் அவர்களின் பரிசுத்த ஆவி ஆட்சி பிடித்து இருந்தாலும் இன்னொரு புறம் உள்குள்ளே சரியான பயம் உள்ளது.
5). காரணம் VCK பலமாக உள்ள திருப்போரூர் மற்றும் திருப்பத்தூர் மற்றும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் தோல்வியை TVKவிடம் பெற்று உள்ளது. இது திருமா வயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்தினோடு இல்லாமால் மனது அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
6). இதன் மூலம் சிறுத்தைகள் இப்பொழுது அணில் குஞ்சுகளாக மாறியதை திருமா நன்கு உணர்ந்து உள்ளார்.
7). ஒருவேலை ஆட்சியில் பங்கு எடுத்தால் அதுவே திருமா அரசியலின் கடைசி அத்தியாயம் என்பதை நன்கு அறிவார். விதி வழியது! பொறுத்து இருந்து பார்போம்! கர்மா அதன் கடமையை செய்யும்.
8). அதேசமயம் TVK கட்சி தொண்டர்களில் மூன்றில் ஒரு பங்கு திருமா அவர்களின் சிஷ்யர்கள் தான் என்பதை நன்கு அறிந்து உள்ளார் ஜோசப் விஜய். அதனால் அவர்களை தக்க வைக்க எல்லா முயற்சியும் ஜோசப் விஜய் செய்வார்.
9). இந்த நிலையில் திருமா ஜோசப் விஜய் ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் பண்ணினால் சூழ்நிலையில் உள்ளார். இல்லாவிடல் இருக்கும் சிறுதைகள் காணாமல் போய் விடுவார்கள் கூடவே திருமாவும் காணாமல் போய் விடுவார்.
10). திருமா அவரது கட்சி மீட்டிங் முடிந்து பேட்டி கொடுத்த போது அவர் பின்னால் நின்ற சிறுத்தை குட்டிகள் மூஞ்சியில் ஒருவித ஈடுபாடு இல்லாத நிலை உள்ளது போல் இருந்தது.
11). இந்த வருடமும் அதன் பின்னரும் திருமாவுக்கும் கட்சிக்கு உள்ளேயும் ஜோசப் விஜய் மூலம் நிறைய உள்குத்து பஞ்ச்கள் இருக்கும் என்பதையுணரந்து திமுக உடன் தொடர்வதாக சொல்லிக் கொண்டு வடக்கே தெற்கே சுற்றுவார். காலம் திருமாவுக்கு நல்ல படிப்பினை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அது மட்டுமில்லை இல்லப்போ விசை ஆட்சியில் பங்கு கேட்டால் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி போகும் அதை விரும்ப மாட்டார் வரலாற்றில் வன்னியரசு பேர் நிலைத்தது நிற்க திருமா விடவே மாட்டார் தெரிஞ்சோ தெரியாமலோ திருமா MLA சீட்க்கு நிற்க முற்பட்டார் அப்புறம் அறிவாலயத்தில் கூட்டு வாங்கியவுஇடன் அமைதியாகிவிட்டார் இப்போ என்ன எய்தவது என்று தெரியவில்லை கடைசிவரைக்கும் பிளாஸ்டிக் chair தான் போல
இதை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். தேர்தல் என்பது இந்தியாவில் ஒரு திருவிழா, மக்களுக்கான சுதந்திரம். ஆனால் அது அதிக சுதந்திரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சுதந்திரம் மிகவும் ஆபத்தாகவும் ஒரு காலத்தில் சென்று முடியலாம். அதனால் அதிகபட்சமாக மூன்று அணிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம். முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று என்று இரண்டு சுற்றாக தேர்தல் நடைபெறலாம். முதல் சுற்றில் முன்னணியில் வரும் மூன்று கட்சிகளுக்கு இரண்டாம் சுற்றில் போட்டியிட வாய்ப்பினை வழங்கலாம். இதில் வெற்றி பெரும் கட்சி ஆட்சியை பிடிக்கலாம். கூட்டணி என்பது முதல் சுற்றில் அவரவர் விருப்பமாக கொடுக்கலாம். இரண்டாம் சுற்றில் கட்டாயம் கூட்டணியில் போட்டி போட்டால் உண்டு. இல்லையென்றால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று சட்டம் கொண்டு வரலாம். தேர்தலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகினால் அடுத்த தேர்தல் வரை எந்த பதவி கிடையாது. தற்போது இருக்கும் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்க வேண்டும். கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெற்றவர்கள் தான் ஆட்சி அமைக்க அல்லது ஆட்சியில் பங்கு கொள்ள முடியும். வெட்டி-ஒட்டி இனி கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடாது. இப்போது தமிழகத்தில் வந்தது போல முடிவுகள் வந்தால் ஆறுமாதம் முதல் ஒரு வருடம் வரை அடுத்த தேர்தல் கிடையாது. இல்லையென்றால் மூன்று அணியில் இருந்து அவர்கள் வெற்றி பெற்ற இடத்திற்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த கூட்டாட்சியை நிறுவ வேண்டும். அதிக இடம் பிடித்தவர்களுக்கு இந்தந்த மந்திரி பதவி, அடுத்த இடம் பிடித்தவர்க்கு இந்தந்த மந்திரி பதவி, மூன்றாம் இடம் பிடித்தவர்க்கு இந்தந்த மந்திரி பதவி என்று வாரியமும் அப்படியே ஒதுக்கப்பட்டு அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சியை ஆளலாம்.
திமுகவிடம் ஏதோவொரு விசயத்தில் வசமாக சிக்கிக்கொண்டாய் அங்கிருந்து விலகவும் முடியாமல் சப்பவும் முடியாமல் திரிசங்கு
அய்யய்யோ என்ன இது
நல்லவன் வேஷம் நாலு நாளைக்கு மேல் தங்காது. அடுத்த சோபா டெலிவரி வந்தப்புறம் அடுத்த பிரஸ்மீட்.. போய் வேலைய பாருங்கப்பா...மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு