குளக்கரையில் குவியும் குப்பை: சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆபத்து

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜாநகரம் மேற்கு கிராமம். ராஜாநகரம் கிழக்கு கிராமத்தில் இருந்து ராஜாநகரம் மேற்கு கிராமத்திற்கு செல்லும் வழியில், ஏரிக்கரையை ஒட்டி அருந்ததி குளம் அமைந்துள்ளது. இந்த குளக்கரையை ஒட்டி, அருகே வசிக்கும் மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர்.

இதனால், அந்த பகுதியில் சுற்றச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குப்பையில் இருந்து சிதறும் பிளாஸ்டிக் கழிவுகள் குளம் மற்றும் ஏரியில் பரவியுள்ளன. இதனால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. குளக்கரையில் உள்ள குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நவநீதகிருஷ்ணன்,

ராஜாநகரம்.

Advertisement