மறையும் நீர் வழித்தடங்களால் நீர்மட்டம் குறைகிறது: இளையான்குடி,மானாமதுரையில் பாதிப்பு
மானாமதுரை:மானாமதுரை,இளையான்குடியில் பாரம்பரியமான நீர் வழித்தடம்,கால்வாய்,வரத்துப் பாதை மறைந்து வருவதால் குளங்கள்,கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால் குடிநீருக்கு திண்டாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட கிராமங்கள்,நகர் பகுதிகளுக்கு நீராதாரமாக வைகை ஆறு விளங்கி வருகிறது. கிராமங்களுக்கு அந்தந்த பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள வரத்து கால்வாய் மூலமாக குளங்கள்,கண்மாய்களில் நிரம்பி விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இளையான்குடி வானம் பார்த்த பூமி என்பதால் இப்பகுதியில் பெய்யும் மழையை பொறுத்தே விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையோடு இருப்பதால் திருச்சி காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதியில் குடிநீர், விவசாய தேவையை பூர்த்தி செய்வதற்காக மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து 30 வருடங்களுக்கு முன்பு சுப்பன் கால்வாய் திட்டம் துவங்கப்பட்ட நிலையில் முழுமையாக செயல்படுத்தாததால் இளையான்குடி மக்கள் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மானாமதுரை, இளையான்குடி நகர் பகுதிகளில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பலர் வீடுகளை கட்டி வருகின்றனர். இவ்வாறு உருவாகும் குடியிருப்புகள் வயல்வெளிகளாகவும், நீர் நிலைகளாகவும்,நீர் வழிப்பாதைகளாக இருப்பதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்து வருகிறது. குளங்கள், கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு விவசாயம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்று விட்டால் குடிநீருக்கு மக்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பதற்கும் வரத்துக்கால்வாய் மாயமானதே காரணமாகும்.
மாவட்ட நிர்வாகம் பழமையான நீர்வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்
-
'ஸ்டார்ட் அப்' கடன் பெற விண்ணப்பிக்கலாம்
-
துணை நிறுவன பங்குகளை கைப்பற்றும் 'ஐச்சர்'
-
சட்டவிரோத மணல் விற்பனை லாரி உரிமையாளர்கள் புகார்
-
உரங்கள் ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம்
-
கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்