துணை நிறுவன பங்குகளை கைப்பற்றும் 'ஐச்சர்'

புதுடில்லி : 'வால்வோ ஐச்சர்' வர்த்தக வாகன நிறுவனம், அதன் துணை நிறுவனமான 'வால்வோ ஐச்சர் கனெக்டட் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தில், 23 சதவீதம் கூடுதல் பங்குகளை கையகப்படுத்துகிறது. இந்நிறுவனம், வால்வோ ஐச்சர் வாகனங்களுக்கு, டிஜிட்டல் வாகன இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில், வால்வோ ஐச்சர் நிறுவனம் 51 சதவீதம் பங்கையும், ஐ ட்ரையாங்கில் என்ற நிறுவனம் 49 சதவீத பங்கையும் வைத்து இருந்தன. இந்நிலையில், ஐ ட்ரையாங்கில் நிறுவனத்திடம் இருந்து 23 சதவீத பங்குகளை, 1.10 கோடி ரூபாய்க்கு வால்வோ ஐச்சர் நிறுவனம் கையகப்படுத்துகிறது. எனவே, வால்வோ ஐச்சர் நிறுவனத்தின் பங்கு 51ல் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும்.

இந்நிறுவனம், வாகன கண்காணிப்பு, பாதுகாப்பு, மென்பொருள், ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பு, மின் வாகன போக்குவரத்து தீர்வுகள், இதர வாகன இணைப்பு சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு வருவாய், இரு மடங்கு உயர்ந்து, 91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement