உரங்கள் ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதியுள்ள கடிதம்:
ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரங்கள் தேவையில், 39,001 டன் யூரியா, 28,607 டன் டி.ஏ.பி., 24,235 டன் பொட்டாஷ் உரங்களை, உர நிறுவனங்கள் தமிழகத்திற்கு வழங்கவில்லை.
பரவலாக மழை பெய்து வருவதால், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில், பயிர் சாகுபடி மேற்கொள்ள, விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
இதனால், யூரியா மற்றும் டி.ஏ.பி., உரங்களின் தேவை, அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, 3.83 லட்சம் டன் யூரியா, 1.05 லட்சம் டன் டி.ஏ.பி., 83,000 டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக, தமிழகத்திற்கு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement