'ஸ்டார்ட் அப்' கடன் பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை : சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு கடன் கிடைக்க, தமிழக அரசு முகாம் நடத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள 'ஸ்டார்ட் அப், நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு மற்றும் கடன் கிடைக்க ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தமிழக அரசின் 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம் செய்கிறது. இந்நிறுவனம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதற்காக, கடன் முகாம் நடத்த உள்ளது. இதில், பல வங்கிகள் பங்கேற்க உள்ளன.
இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், 'form.startuptn.in/CAMCH' தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, வரும், 22ம் தேதி கடைசி நாள். முகாம் நடக்கும் தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement