கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
சென்னை: 'கால்நடை பராமரிப்பு துறையில், 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும், கால்நடை உதவி மருத்துவர்களுக்கு, பணி உயர்வு வழங்கப்படவில்லை. புதிதாக அமைந்துள்ள அரசு, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்' என, கால்நடை உதவி மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக, உதவி மருத்துவர் நிலையிலேயே நீடிக்கிறோம். பிற அரசு மருத்துவ துறைகளில், குறிப்பிட்ட ஆண்டுகளில், தானாகவே பணி உயர்வு வழங்கப்படுவது போல், இத்துறைக்கு வழங்கப்படுவதில்லை.
பதவி உயர்வு தள்ளிப்போவதால், ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் மற்றும் இதர படிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இந்த விஷயத்தில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தகுதியான மூத்த மருத்துவர்களுக்கு, காலமுறை பணி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement