சட்டவிரோத மணல் விற்பனை லாரி உரிமையாளர்கள் புகார்
சென்னை: தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்த நிலையில், 2023ல், 12 மணல் குவாரிகள் மூடப்பட்டன. அதன்பின், புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை.
குறிப்பாக, குவாரிகளில் இருந்து மணல் அள்ளி வந்து விற்பனை செய்வதற்காக, ஒரு இடத்தில் இருப்பு வைப்பர். அந்த இடம், 'யார்டு' என்று கூறப்படுகிறது. யார்டுகளில் இருந்து தான் லாரிகளுக்கு ஆற்று மணல் ஏற்றப்படும். இதில் குவாரிகளில் இருந்து, யார்டுகளுக்கு மணல் எடுத்து வரவும், லாரிகளில் ஏற்றவும், ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப் படுகின்றனர்.
இவர்கள் செய்த முறைகேடுகள் தான், குவாரிகள் மூட காரணமாக அமைந்தன. இதில், நீர்வளத் துறை சார்பில் மட்டுமல்லாது, மணல், ஜல்லி, கிராவல் மண் ஆகியவற்றை சில்லரை விற்பனை செய்வதற்காக, தனி நபர்களும் யார்டுகள் அமைக்கின்றனர்.
இவ்வாறு தனி நபர்கள் யா ர்டுகள் அமைக்க வேண்டு மானால், அதற்கான மணல் உள்ளிட்ட பொருட்கள் எங்கிருந்து, எப்படி பெறப்பட்டன என்ற விபரங்களை, மாவட்ட கலெக்டரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் இருப்பு நிலவரமும் கலெக்டருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்காமல், தனி நபர்கள், தன்னிச்சையாக யார்டுகள் அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக, தேர்தல் பணிகள் காரணமாக, கலெக்டர்கள் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. இதை பயன்படுத்தி, மாவட்டத்துக்கு ஐந்து முதல், 10 இடங்களில் தனி நபர்கள் மணல், ஜல்லி விற்பனை யார்டுகளை திறந்துள்ளனர்.
இந்த விஷயத்தில், கலெக்டர்கள் ஆய்வு செய்து, மோசடியாக திறக்கப்பட்ட யார்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு