முதல்வர் விஜய்யுடன் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழு சந்திப்பு

சென்னை: சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினர் (எம்சிசிஐ) முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து பேசினர்.

தலைமை செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வணிகச் செயல்முறைகளை மேலும் எளிமைப்படுத்துவது, அதன்மூலம் தொழில் மற்றும் பொருளார வளர்ச்சியை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அரசு மற்றும் தொழிலகங்கள் இடையே இணைப்புப் பாலமாக செயல்பட்டு வரும் எம்சிசிஐயின் முக்கிய பங்களிப்பை முதல்வர் பாராட்டினார்.

மேலும், வர்த்தகக் குழுவினர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய், அவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் ஆவண செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதோடு, முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க, எம்சிசிஐ தொடர்ந்து தனது ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, கோடை காலத்தில் மின்தேவை பயன்பாடு அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, மின்வாரிய அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

Advertisement