40 ஆண்டுகளில் நார்வே சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி
ஓஸ்லோ: அரசு முறைப் பயணமாக நார்வே சென்றுள்ள பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளில் அந்த நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நார்வே சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; நார்வே நாட்டின் ஓஸ்லோ நகருக்கு வந்தடைந்துள்ளேன். விமான நிலையத்தில் எனக்கு அன்பான வரவேற்பளித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்ருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயணம் இந்தியா - நார்வே இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இப்பயணத்தின் போது, நான் நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோரைச் சந்திக்கவுள்ளேன். மேலும், பிரதமர் ஜோனாஸூடன் இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாளை ஓஸ்லோவில் நடைபெற இருக்கும் இந்தியா - நார்வே உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டு பிரதமர்களுக்கு பங்கேற்க இருக்கின்றனர்.
குமரேசா ...எனக்கு வரும் 200 நின்று விட்டது. உனக்கு இப்பவும் வருகிறதா ?
1). சென்ற இடமெல்லாம் பாரத தேசத்தின் பட்டொளி வீசிப் பறக்கிறதை நம் காலத்தில் பார்க்க பரவசமாக உள்ளது.
2). மோடி ஜி பாரதம் மட்டுமில்லாமல் உலகம் போற்றும் நல்ல ஒரு டீம் லீடர்.
3). பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜி!
இதையெல்லாம் T V யில் பார்த்து கொண்டுள்ள நம்ம சப்பான் பிரதமர் நிலையை நினைத்தால்.
ப்ளீஸ்.. தயவுசெய்து பாரதப் பிரதமர் மோடி ஜியுடன் பொம்மை அல்லு சில்லையெல்லாம் ஒப்பிட்டோ , சேர்த்துவைத்தோ பேசாதீர்கள். யாருடனும் ஒப்பீடு செய்யமுடியாத ஒரு உன்னத தலைவர் மோடி அவர்கள்.. எந்த விதமான சூழ்நிலையையும் அவர் கையாளும் விதத்தை உலக தலைவர்கள் அனைவரும் மோடியிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.. வீரியத்தை விட காரியத்தில்தான் அவர் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்துகிறார். இக்கட்டான சூழ்நிலையில் அவர் தன்னை நம்பி இருக்கும் 150 கோடி மக்களின் நலனை முன்னிறுத்திதான் முடிவுகளை எடுக்கிறார். இதெல்லாம் இங்குள்ள அப்ப சப்பைகளுக்கெல்லாம் புரியாது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு அரசாங்க செலவில் உலகம் சுற்றுகிறார் இந்திய பிரதமர் நரேந்திரமோடி...
அவர் அமீரகம் சென்றதே இந்தியாவுக்கு பெட்ரோல் தடைஇன்றி கிடைப்பதை உறுதி செய்யத்தான்.
உங்க எஜமான் மாதிரி விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டதை முதலீடு செய்ய சென்றதை போல செல்லவில்லை தற்குறியே
அவர் வெளிநாடுகளுக்கு சென்று உறவை மேம்படுத்தியதால் தான் இன்று இந்தியா பெரும் இடர்களை இலகுவாக கடந்து போகிறது. 200 ரூபாய் இன்னமும் வருகிறதா ?
குமேரசா நீயெல்லாம் என்ன பிறவி
Ashamed of you kumaresa Over the years you have been kept as a illiterate stuff by these dravidian parties. Please tell us whether you still receive Rs. 200 as oopi??
தயவுசெய்து திருந்து..மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்