மூடி இல்லாத பாதாள சாக்கடை: பெருமாள் நகர் மக்கள் அச்சம்

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகரில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் மூடியின்றி திறந்த நிலையில் உள்ளது. அப்பகுதியில் சிறுவர் - சிறுமியர் விளையாடும் நிலையில், அதில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

தற்காலிக தீர்வாக அப்பகுதி மக்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல் மீது முள் போட்டு எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மேன்ஹோல் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரா.கிருஷ்ணன்,

பொன்னேரி.

Advertisement