சோழவரம் - புழல் ஏரிகளின் கால்வாய் பராமரிப்பு மோசம்: குப்பை கழிவுகளால் மாசடையும் தண்ணீர்
சோழவரம்: சோழவரம் - புழல் ஏரிகளுக்கு இடையேயான பேபி கால்வாயின் பல்வேறு பகுதிகளில் குப்பை கழிவுகள் குவிந்தும், செடிகள் வளர்ந்தும் பராமரிப்பின்றி இருப்பதால், தண்ணீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர், தேவையின்போது பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படும். தற்போது, சோழவரம் ஏரியில் இருந்து, விநாடிக்கு 148 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், பேபி கால்வாயின் கரையோரங்களில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது, புழல் ஏரிக்கு செல்லும் தண்ணீருடன் கலந்து, மாசடையும் அபாயம் உள்ளது.
மேலும், கால்வாயின் கரையோரங்களில் செடி, மரங்கள் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. ஆங்காங்கே, ஆகாயத் தாமரைகளும் வளர்ந்துள்ளன. சோழவரம் ஏரி, 2024 - 2025ம் ஆண்டுகளில், 40 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட நிலையில், பேபி கால்வாய் பராமரிப்பில், நீர்வளத் துறை அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சோழவரம் - புழல் ஏரிகள் இடையேயான பேபி கால்வாயை சீரமைக்கவும், குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!