ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவக்கம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகலாபுரம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.
திண்டிவனம் நாகலாபுரத்தில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த பெஞ்சல் புயலின் போது, சேதமானது. தொடர்ந்து தற்காலிகமாக நகராட்சி சார்பில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமும் தொடர் மழையால் சேதமானது.
இதை தொடர்ந்து பொதுமக்கள் நாகலாபுரத்தில் நிரந்தமாக பாலம் கட்டித்தர வேண்டும் என்று நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து புதியதாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலம் கட்டுவதற்கான பணி நேற்று முன்தினம் காலை துவங்கியது. இப்பணியை நகரமன்ற தலைவர் நிர்மலா துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்
Advertisement
Advertisement