சோழ மன்னர்கள்; சிறப்பு கருத்தரங்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின், 381வது நிகழ்வாக, ‘நல்லாட்சி நாயகன் அருள்மொழிவர்மன்’ என்ற தலைப்பில், சோழ மன்னர்களை போற்றும் விதமாக கருத்தரங்கம் நடந்தது. மன்ற செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.
மன்ற துணை தலைவர் அஜ்மல்கான் தலைமை வகித்து, சோழ மன்னர்களின் நிர்வாகம், அரசாட்சி உள்ளிட்டவை குறித்தும், குடவோலை முறை குறித்தும் பேசினார். புலவர் செல்லமுத்து, கேரளா சித்துார் அரசு கல்லுாரி பேராசிரியர் கதிரவன் ஆகியோர் பேசினர்.
ராஜராஜ சோழனின் ஆட்சி ஏன் பொற்கால ஆட்சி என அழைக்கப்பட்டது, அதற்கான வரையறை என்ன, அந்த லட்சியத்தை அடைய புதிதாக அரியணை ஏறும் ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், உத்தமசோழன், ராஜராஜசோழன் என அனைத்து மன்னர்கள் பணிகள் குறித்தும் விளக்கினர். சோழமன்னர்களில் ராஜராஜன் காலத்தில் செய்த சில பணிகளாக, பரந்து விரிந்த பேரரசை கட்டமைத்தது, நிலமளந்து வரிவிதித்தது, பன்னாட்டு வணிகத்தை மேம்படுத்தியது, கல்வெட்டுகளில் மெய்கீர்த்தி எழுதுவித்து, மண் கோவில்களை கற்கோவிலாக மாற்றியது குறித்து விளக்கப்பட்டன. திருமுறை தொகுத்தது, தமிழுககு முக்கியத்துவம் அளித்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன.
விழா ஏற்பாடுகளை மன்ற தலைவர் சண்முகம், இணை செயலர் பாலமுருகன், நிர்வாகிகள் காளிமுத்து, ரவீந்திரன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்