பதவி பறிக்கப்பட்டாலும் நிர்வாகிகளை தன்பக்கம் வலைத்துப் போட்ட 'மாஜி': பழனிசாமி அணியினர் அதிர்ச்சி
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவை மீறி, சட்டசபையில் கடந்த 13ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,விற்கு ஆதரவாக ஒட்டளித்தனர்.
இதனால், விழுப்புரம் மாவட்ட அ.திமு.க., செயலாளராக இருந்த சண்முகத்தின் பதவியை பொதுச் செயலாளர் நீக்கி உத்தரவிட்டார். அதன்பிறகு, மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் சண்முகம் தலைமையில் ஒரு அணியினரும், பசுபதி தலைமையில் ஒரு அணியினரும், யார் பக்கம் செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக, ஆள் பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் அணிக்கு பலம் சேர்ப்பதற்காக நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினருக்கு கவனிப்பு வேட்டை துவங்கி மாவட்ட அரசியல் சூடுபிடித்து விட்டது. இதன் காரணமாக சண்முகம் தரப்பில் அதிகளவில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் சாய்ந்து விட்டனர்.
இதே போல் பசுபதி தரப்பினரும் பழனிசாமி அணிக்கு வலு சேர்க்கும் வகையில் பொதுக் குழுவில் ஒட்டளிப்பதற்கு தகுதியுள்ள நிர்வாகிகளை வலை வீசும் வேலையை துவக்கி விட்டனர்.
இதற்கிடையே பொதுக்குழுவில் தங்கள் பலத்தைக் காண்பிக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்குழுவில் பங்கேற்க தகுதியிலுள் நிர்வாகிகளிடம் முன்கூட்டியே சண்முகம் தரப்பினர் கையெழுத்து வாங்கி விட்டதால், பசுபதி தரப்பினர் கையெழுத்து போட்டுள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக நீண்ட காலமாக கோலேச்சி வந்த சண்முகத்தின், மாவட்ட செயலாளர் பதவியை பழனிசாமி பறித்துவிட்டாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் மாஜி அமைச்சர் சண்முகம், தன் பக்கம் வளைத்துப் போட்டது பழனிசாமி அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலையை வீசிப் போட்டாலும் "வளைத்துப் போட்டார்" என்றே இருக்க வேண்டும் தமிழில் கவனம் தேவைமேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்