கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்படுமா?
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகதுருகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் 4 வழிச்சாலையையொட்டி, வீரசோழபுரம் மணிமுக்தா ஆற்றின் அருகே புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தியாகதுருகம் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது.
கலெக்டர் அலுவலகம் செல்லும் மக்கள் பாதுகாப்பாக இறங்கி 4 வழிச்சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
அதேபோல் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்டுக் கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். அப்போது அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இது போன்ற தருணங்களில் கள்ளக்குறிச்சியில் இருந்து கூடுதல் போலீசாரை வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது. தியாகதுருகம் காவல் நிலையத்தில் பணி புரியும் போலீசார் சட்டம், ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடவே நேரம் சரியாக உள்ளது.
கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மேலும் கூடுதல் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும்.
இதற்கு வசதியாக கலெக்டர் அலுவலகம் அருகில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து அங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட எஸ்.பி., அரவிந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்