சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி

9

தஞ்சாவூர்: சூரியன் ஒருபோதும் மறையாது. மறுபடியும் உதிக்கும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது;

10 நாட்களிலே மக்கள், இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர ஆரம்பித்துவிட்டனர். நாள் ஆக ஆக இந்த ஆட்சியின் முகம் தானாகவே வெளிச்சத்துக்கு தெரியும். போக, போக இன்னும் பல உண்மைகள் தெரியவரும்.

தாயின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஒருவரை பார்த்து, நிச்சயம் மயங்கும். மகிழ்ச்சி அடையும். தாயிடம் இருந்து தாவிச் சென்று அவரிடம் சிறிது நேரம் சென்று உட்கார்ந்து கொள்ளும்.

ஆனால் அந்த கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் நிரந்தரமாக இருந்துவிடாது. கொஞ்ச நேரத்திற்கு பின்னர் அந்த குழந்தைக்கு உண்மையான பாசம் என்றால் என்னவென்று தெரியும். தாயின் முகத்தை நிச்சயம் தேடி பார்க்கும். தாயிடம் தான் திரும்பி வரும்.

அதுமாதிரி இப்போது கவர்ச்சி மாயாஜாலத்தை காட்டி சிலர் ஈர்த்து இருக்கிறார்கள். இந்த கவர்ச்சி மக்களின் கஷ்டத்தை போக்காது. அடிப்படை பணிகளை நிறைவேற்றாது. எந்த பிரச்னைக்கும் அது தீர்வு காணாது. எனவே தாயின் அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை அந்த குழந்தை மீண்டும் உணர்ந்து, தமிழகத்திற்கு தாயாக இருக்கக்கூடிய திமுகவை நோக்கி, அதன் தலைவரை நோக்கி நிச்சயம் அந்த குழந்தை விரைவில் வரும்.

எனவே, சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில் தமிழகம் மீண்டும் செழிக்கும்.

இவ்வாறு உதயநிதி கூறினார்.

Advertisement