துவங்கியது பருவமழை: மேல்நீராறில் 93 மி.மீ., பதிவு
வால்பாறை: தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் மேல்நீராறில், 93 மி.மீ., மழை பெய்தது.
பி.ஏ.பி., அணைகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வால்பாறையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த, 16ம் தேதி முதல் பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் இடியுடன் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்யும் பருவமழையால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
(மே 18)காலை, 6:00 மணி வரை பெய்த மழை அளவு விபரம் (மி.மீ.,):
வால்பாறை - 31, சோலையாறு - 10, பரம்பிக்குளம் - 16, மேல்நீராறு - 93, கீழ்நீராறு - 15, காடம்பாறை - 32, மேல்ஆழியாறு - 42, சர்க்கார்பதி - 28, வேட்டைக்காரன்புதுார் - 2, துாணக்கடவு - 11, பெருவாரிப்பள்ளம் - 10, நவமலை - 37, பொள்ளாச்சி - 2, என்ற அளவில் மழை பெய்தது.
மேலும்
-
சீரமைக்கப்படுமா - மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக அழிவதற்குள்- ஒவ்வொரு ஆண்டும் சேதம் அதிகரிப்பால் பக்தர்கள் கவலை
-
டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதம்
-
மசினகுடி மாயார் சாலையில் உலா வரும் புலிகள் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை
-
வண்டல் மண் அள்ள அனுமதிவிவசாய சங்கம் வலியறுத்தல்
-
சத்தி ரோட்டில் 1.2 கி.மீ. நிலம் எடுப்பது எப்போது?
-
புகார் பெட்டி...