ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மே 19 - 

நிலக்கோட்டை விளாம்பட்டியில் தனலட்சுமி பேப்பர் மில்லை மூடியதால் இதை அரசே ஏற்று நடத்த கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் பாலன் தலைமை வகித்தார் .செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வைத்தார். தேசிய குழு உறுப்பினர் நந்தா சிங் , செயலாளர் சந்திரமோகன், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிகண்டன் பேசினர். சங்க நிர்வாகிகள் கோபால், கண்ணன் பேசினர். கலெக்டர் சரவணனிடம் மனு வழங்கினர்.

Advertisement