செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்குவதில் தாமதம் ஏன்?
மேட்டுப்பாளையம்: நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பயிர் செய்து வரும், 'செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்குவதில் தாமதம் ஏன்' என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மத்தம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், செங்காம்பு கறிவேப்பிலை விவசாயம் பிரதானமாக உள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்து வரும், செங்காம்பு கறிவேப்பிலைக்கு, புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து காரமடை அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் முத்துசாமி கூறியதாவது:
இப்பகுதியில் பயிர் செய்யப்படும் செங்காம்பு கறிவேப்பிலை நல்ல மனமும், சுவையும் இருப்பதால், பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
அறுவடை செய்யும் கறிவேப்பிலையை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் காரமடையில் மற்றும் சுற்றுப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும், ஆயிரக்கணக்கான கறிவேப்பிலை நாற்றுகளை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். செங்காம்பு கறிவேப்பிலைக்கு, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியுடன் இணைந்து, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு, புவிசார் குறியீடு பெறுவதற்கு தேவையான அனைத்து பதிவுகளையும் செய்துள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக புவிசார் குறியீடு வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் பாலசுப்பிரமணியன் கூறுகையில், செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு வழங்கிய கோரிக்கை மனுவை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
துறை அதிகாரிகள் குழு, ஆய்வு குறித்து ஆன்லைன் வாயிலாக விபரங்களை கேட்டனர். அனைத்து விபரங்களையும் தெரிவித்தோம். குழுவினர் கோரிக்கை மனுவை ஏற்று, பதிவு செய்துள்ளனர். பல்வேறு தரப்பினர் புவிசார் குறியீடு கேட்டு அனுப்பிய தகுதியான மனுக்கள் வரிசைப் பட்டியலில், கறிவேப்பிலை மனுவையும் சேர்த்துள்ளனர். வரிசைப்படி ஒவ்வொன்றாக புவிசார் குறியீடு வழங்கி வரும் நிலையில், கறிவேப்பிலைக்கும் புவிசார் குறியீடு வழங்குவர். இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நமக்கு தகவல் தெரிவிப்பர். இவ்வாறு வனக்கல்லூரி டீன் தெரிவித்தார்.
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு