மழையில் நெல் மூட்டைகள் பாதுகாக்க நடவடிக்கை தேவை


@quote@ தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை, ஆங்காங்கே மழை, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, கோடை காலத்தில் பெய்யும் திடீர் மழை. எனவே, திடீர் கோடை மழையால், அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருக்கிற நெல் மூட்டைகளை பாதுகாக்க, உடனடி நடவடிக்கை தேவை.
கோடை காலத்தில் பெய்யும் மழையால், ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். அவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை. குறிப்பாக, திடீர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும். விவசாயிகள் மழை பாதிப்பை சமாளிக்க, அவர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.

- வாசன், தலைவர், த.மா.கா.,
quote

Advertisement