பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; ஒரே வாரத்தில் 2வது முறையாக அதிகரிப்பு

40


புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஒரே வாரத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்துள்ளன.
மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து, இழப்பை சமாளிக்க முடியாமல் எண்ணெய் நிறுவனங்கள் திணறின. இந்நிலையில், நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15ம் தேதி உயர்த்தப்பட்டது.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாயும் அதிகரித்தன. போர் சூழல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று (மே 19) ஒரே வாரத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்து இருக்கின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் உள்ளிட்டவையும் விலை உயர்வை சந்திக்கும் அபாயம் நிலவுகிறது.


தற்போதைய விலை நிலவரம்:


டில்லியில்...
* பெட்ரோல் (ஒரு லிட்டர்)- ரூ.98.64


* டீசல் (ஒரு லிட்டர்)- ரூ.91.58

சென்னையில் விலை நிலவரம்:

* பெட்ரோல் (ஒரு லிட்டர்)- ரூ.104.49

* டீசல் (ஒரு லிட்டர்)- ரூ.96.11

மும்பையில் விலை நிலவரம்:

* பெட்ரோல் (ஒரு லிட்டர்)- ரூ.107.59

* டீசல் (ஒரு லிட்டர்)- ரூ.94.08

கொல்கட்டாவில் விலை நிலவரம்:

* பெட்ரோல் (ஒரு லிட்டர்)- ரூ.109.70

* டீசல் (ஒரு லிட்டர்)- ரூ.96.07

Advertisement