வீரப்பனை பிடித்த எஸ்.ஐ.,க்கள் பெற்ற பலன்களை வாபஸ் பெறக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: சந்தன கடத்தல் வீரப்பன், 2004ல் சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்டார். இதனால், அதிரடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த, 900க்கும் மேற்பட்டோருக்கு ஒரு படிநிலை விரைவு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில், 16 காவலர்கள் எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் பதவி உயர்வு பெற்ற நேரத்தில், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்ததால், 2009ல் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, 16 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், 'மனுதாரர்களுக்கு, 2004ல் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில், மாநில அரசால் தவறாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சுற்றுச்சூழல், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய வீரப்பனை கொன்ற சிறப்பு அதிரடிப்படையில் உயிரை பணயம் வைத்து, மனுதாரர்கள் பங்கேற்றனர். இதனால், எஸ்.ஐ.,க்களாக பணியாற்றிய காலத்தில், பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து, அவர்கள் பெற்ற அனைத்து பலன்களையும் மாநில அரசு திரும்ப பெறக்கூடாது' என, உத்தரவிட்டனர்.
கடமையை செய்பவர்களுக்கு வெகுமானம் சன்மானம் எதற்கு? பலமாடி கட்டடங்களில் மற்றும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீயை தன் உயிரைப்பயணம் வைத்து அணைத்தவர்களுக்கோ, பெருமழை நேரத்தில் தன் உயிரை துச்சமெனக்கருதி மக்கள் நலம் காக்க வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கோ யாரும் எந்த சன்மானமும் வெகுமதியும் கொடுப்பதில்லை. நாடு சீரழிவுக்கு ஜெயலலிதா வும் கருணாநிதி யும் ரொம்ப காரணம்.மேலும்
-
சீரமைக்கப்படுமா - மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக அழிவதற்குள்- ஒவ்வொரு ஆண்டும் சேதம் அதிகரிப்பால் பக்தர்கள் கவலை
-
டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதம்
-
மசினகுடி மாயார் சாலையில் உலா வரும் புலிகள் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை
-
வண்டல் மண் அள்ள அனுமதிவிவசாய சங்கம் வலியறுத்தல்
-
சத்தி ரோட்டில் 1.2 கி.மீ. நிலம் எடுப்பது எப்போது?
-
புகார் பெட்டி...